அரசு பள்ளி ஆசிரியருக்கு ஆங்கில மொழி பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2013

அரசு பள்ளி ஆசிரியருக்கு ஆங்கில மொழி பயிற்சி.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் புதியதாக துவங்கப்பட்ட ஆங்கில வழிக் கல்வி ஆசிரியர்களுக்கு, 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 396 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,
புதியதாக இந்த கல்வியாண்டில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டது. ஆங்கில வழிக் கற்றல் ஏதுவாக அமையும் பொருட்டு, ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் தகவல் பரிமாறும்பயிற்சி, ஒவ்வொரு வாரமும் கடைசி, இரண்டு வேலை நாட்களாக 10 நாட்கள் பயிற்சி நான்கு கட்டங்களாக 258 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் ஆசிரியர்களுக்கு சோடோஸ் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ராமமூர்த்தி, பூர்ணிமாமற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் நளினா, அனுஷா ஆகியோர் வழங்கினர்.

பயிற்சியில், ஆங்கிலத்தில் பாடப்பொருளை எளிதாக விளக்கவும், உரிய உச்சரிப்புடன் பேசவும், செயல்பாடுகளின் மூலம் கற்றலை மெருகேற்றவும் கற்பிக்கப்பட்டது.ஆசிரியர்களுக்கு, தன்னம்பிக்கை வளர்க்கும் பொருட்டு கடைசி 2 நாட்கள் ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக, எஸ்.எஸ்.ஏ., சி.ஏ.ஓ., பொன்குமார் பாராட்டிச்சான்றிதழ் வழங்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காவேரி செய்திருந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி