காற்றில் பறக்கும் தமிழக அரசு உத்தரவு சான்றிதழுக்கு அலையும் மாணவர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2013

காற்றில் பறக்கும் தமிழக அரசு உத்தரவு சான்றிதழுக்கு அலையும் மாணவர்கள்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6, 10, ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கான ஜாதிச்சான்று, இருப்பிட சான்று உள்ளிட்டவைகளை, பெரும்பாலான பள்ளி ஆசிரியர்கள்
பெற்றுத்தராமல், மாணவர்களையே அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, உதவித்தொகை பெறவும், தேர்வு சான்றிதழ்களில் இடம் பெறவும், ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றுகளை, கல்வித்துறைக்கு சமர்பிக்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டில், பள்ளியிலேயே இச்சான்றிதழ்கள் பெற்று வழங்க வேண்டும் எனவும், மாணவர்களை அலைக்கழிக்க வேண்டாம், எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த ஆண்டுகளில், வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு நடையாய் நடந்த ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில், மீண்டும் மாணவர்கள் தலையிலேயே இப்பொறுப்பை சுமத்தி விட்டனர்.மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து, பள்ளி சார்பில் பெற்றுத்தரப்பட்ட சான்றிதழ் விவரங்கள் கேட்கப்படுவதால், மாணவர்கள் விரைவாக பெற்று வரும்படியும் விரட்டப்படுகின்றனர். மாணவர்கள் பெற்று வந்த சான்றிதழ்களை, பள்ளி சார்பில் பெற்றுத்தந்ததாக, கல்வித்துறைக்கு புள்ளி விவரங்கள் அனுப்புகின்றனர்.இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களுக்குரிய சான்றிதழ்கள் பெற்றுத்தரும் பணியில், ஆசிரியர்கள் இறங்கவில்லை.

இதனால், மாணவர்கள் பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு, சான்றிதழ்களுக்கு அலையும் நிலை இருந்தது. அரசு உதவி பெறும் பள்ளிகள், சான்றிதழ் பெற்றுத்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், தமிழக அரசின் உத்தரவு நடப்பாண்டிலேயே, பல பள்ளிகள் அலட்சியம் செய்வதால், அடுத்த ஆண்டில் இந்த நடைமுறை சுத்தமாக மறைந்து விடும் நிலை உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வராமல் அலைந்து வாங்கிக் கொடுத்த சான்றுகளைவைத்து, வெறும் புள்ளி விவரங்களை மட்டுமே பள்ளி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி