முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு: தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2013

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு: தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்.


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் நேரடியாகவும், 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு
மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.அந்த வகையில், முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள். முதுகலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில், நேரடி நியமனம் என்றால் இளநிலை, முதுகலை இரண்டு பட்டப் படிப்பிலும் குறிப்பிட்ட பாடத்தைப் படித்து பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால், பதவி உயர்வு நிய மனத்தில், பி.எட். தகுதியுடன் சம்பந்தப் பட்ட பாடத்தில்முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும். பட்டப் படிப்பில் அவர்கள் எந்த படிப்பும் படித்திருக்கலாம் (கிராஸ் மேஜர்). உதாரணத்துக்கு பி.எஸ்சி. இயற்பியல்பட்டம் பெற்ற அறிவியல் ஆசிரியர் எம்.ஏ. ஆங்கிலம் படித்திருந்தால் அவர் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்.இந்த பதவி உயர்வில், அறிவியல் படிப்புகளுக்கு (இயற்பியல், வேதியி யல், விலங்கியல்) மற்றும் கணித படிப்புக்கு கிராஸ் மேஜர் அனுமதி இல்லை. ஆனால், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் கிராஸ் மேஜர் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குகிறார்கள். வணிகவியல், பொருளாதார முதுகலைப் பாடங்களில் 3:1 என்ற விகிதாச்சாரமுறையும் கடை பிடிக்கப்படுகிறது.

அதாவது, 3 இடங்கள் கிராஸ் மேஜர் பட்டதாரிகளுக்கும் ஒரு இடம் இளங்கலை, முதுகலை இரண்டும் ஒரே பாடத்தில் படித்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் 1:1 விகிதாச்சாரத்தை பின்பற்று கிறார்கள். ஒரு காலியிடம் கிராஸ் மேஜர் பட்டதாரிக்கும் ஒரு இடம் இளநிலை, முதுகலை இரண்டிலும் தமிழோ அல்லது ஆங்கிலமோ படித்தவர் களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இதனால், ஒரே பாடத்தில் இளநிலை, முதுகலை பட்டங்களை பெற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.அறிவியல் பாடங்களுக்கான பதவி உயர்வில் மட்டும் கிராஸ் மேஜர் முறை இல்லாதபோது மொழிப்பாடத்திலும், வணிகவியல், பொருளாதார பாடங் களில் மட்டும் இந்த முறையை அனு மதிப்பது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கழக மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறியதாவது:-தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தேவையான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைக்காத காலத்தில் இதுபோன்ற பதவி உயர்வு உத்தரவு போடப்பட்டது.

ஆனால், தற்போது இந்த பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மிக அதிகமாக உள்ளனர்.அப்படியிருக்கும்போது இன்னும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது முரண்பாடாக இருக் கிறது. இளங்கலை வேறு பாடத் தையும் முதுகலை வேறு பாடத்தையும் படித்த ஆசிரியர்களைக் காட்டிலும் இரண்டு படிப்பிலும் ஒரே பாடத்தை படித்துள்ள ஆசிரியர்களுக்கு பாட அறிவு ஆழமாக இருக்கும் என்றார்.

12 comments:

  1. tamilnaddula total educaiton sustemimey muranpadathan irukku

    ReplyDelete
  2. suppose maths,pg finished in mcom he will get the pg commerce post ,but he did not study in commerce at the hsc level,in mcom syllabus not cover the hsc lesonsSO he can handle the class!TO HARD science &maths bt get the chance to upper primary to hsc level BUT COMMERCE & ECONOMICS CANDIDATE GET THE CHANCE ONLY IN pG LEVEL SO THE GOVT CANCEL THE PROMOTION TO OTHERS WILL BE ELIMINATED FOR THE COM & ECONIMICS SUBJECT THE DIRECTOR OF EDUCATION WILL REVIEW GO FOR CROSS MAJOR PROMOTION AND REVIEW THE RESULT FOR ALREADY PROMOTED THRO CROSS MAJORc

    ReplyDelete
    Replies
    1. yes already we comm and eco are suffered lot. more over waiting for long period due to less vacancies since we can be appointed only for +2 but other subject people not like commerce and economics people they are having chance to get lower level as well as higher sec level. they should stop promotion for commerce and economics. at least cross major should be stopped.

      Delete
  3. GIVE UG Appoinment for economics and commerce then only that is correct .otherwise govt cheating them.

    ReplyDelete
  4. compare to other subjects eco com vaccancies very low .they entered to their seats by a side way named as promotion

    ReplyDelete
  5. please remove the cross major promotion system

    ReplyDelete
    Replies
    1. yes remove the cross major promotion. these many people are available for commerce and economics, why to give promotion for cross major people. for direct recruitment cross major not eligible but for promotion eligible. for this TRB must do something

      Delete
  6. In dmk period all SGT and BT are given promotion like this that is why we commerce and economics people did not have these many vacancies . For example llast year and this year itself we have exam for nearly 700 commerce vacancies but during that dmk period we hardly had 100 posts only for appointment. we are cheated by them. I am correct or not?

    ReplyDelete
  7. Why government do like this

    ReplyDelete
  8. Total pg commerce vacancy 56 Fully qualified commerce teachers as per director of school education list as on 01.01.2013 43 (Forty four) for Pg commerce promotion (Having 34 years of +2 teaching experience) but called for counseling fully qualified mere 14 and cross Major in commerce 42 (those who were appointed recently) What a Justice ? director of school education must/should review this .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி