ஆசிரியர் தகுதித் தேர்வில், தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில், தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர்!


ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது
புதிய புகார்எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி நடந்தது. இதில் 6.60லட்சம் பேர் பங்கேற்றனர்.

டி.இ.டி., தேர்வு முடிவு நவ., 5 ம் தேதி வெளியிடப்பட்டது.தேர்வில், 4.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். சரியான பல பதில்களுக்கு மதிப்பெண் தரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார்கள் குவிந்தன. இந்நிலையில் தற்போது இரண்டாம் தாள் சமூக அறிவியல் தேர்வில்கேள்வித்தாளில் தமிழ் வழியில் ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் ஒரு மாதிரியாகவும், கேள்வியே தவறாக கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட கோவை தேர்வர் விஜயலட்சுமி கூறுகையில், "" டி.இ.டி., இரண்டாம் தாள் சமூக அறிவியல் தேர்வில், " பி' வரிசை கேள்வித்தாளில் 113 வது கேள்வியில் "மனிதன் மண்வளத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சி ' என்று கேட்கப்பட்டுள்ளது. அதே கேள்வி ஆங்கில வழியில், "மண் அரிமானத்தை தடுக்க மனிதன் மேற்கொள்ள வேண்டிய முயற்சி' என்று கேட்கப்பட்டுள்ளது. மண்வளபாதுகாப்பு என்பதை மண் அரிமானத்துடன் ஒப்பிட இயலாது, இரண்டும் வேறு அர்த்தங்களை கொண்டுள்ளது. மேலும், இக்கேள்விக்கான பதில், "ஆப்சன் பி' "வேளாண்மை செய்தல்' என்பதற்கு பதிலாக "ஆப்சன் டி' "தாவரங்களை வளர்த்தல்' என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான சரியான பதில் நான்கு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் தெளிவாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பினோம். மேலும் நேரடியாக சென்று அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தோம். இருந்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தபதிலையும் தெரிவிக்கவில்லை. தற்போது, 89 மதிப்பெண் பெற்றுள்ளேன். ஒரு மதிப்பெண்ணில் என் வாழ்க்கை பாதித்துள்ளது. என்னை போன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

31 comments:

  1. naanumthan 89 maths aana trb will no give mark .evvalvu kenjinaalum irakkam illa avangalukku

    ReplyDelete
  2. hai friends any news about cv???? anybody know about that?/?/

    ReplyDelete
  3. Court order ennachu 2mark add pannuratha sonnakale

    ReplyDelete
  4. Court order ennachu 2marks add pannuratha sonnnangalee

    ReplyDelete
  5. தேர்வு வாரியத்திற்கு யார் எப்படி போனால் என்ன , நாங்கள் திறம்பட தேர்வு நடத்தி இருக்கிறோம் என தகுதி உள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என தெரிவித்து விடுகிறார்கள் வல்லுநர் குழு எடுக்கும் கேள்வியில் விடை பிழை இல்லை என்றால் ஏன் கீ விட்டவுடன் ஒருவாரம் அவகாசம் கொடுகிறார்கள் . வல்லுநர் கொடுக்கும் கீ தவறு என நீதிமன்றம் சுட்டிக்காட்டி மதிப்பெண் தருகிறது.அப்போது மற்றவர் நிலை என்ன .சென்னை விட தருமபுரி சேலம் மாவட்டத்தில் அதிக தேர்ச்சி காரணமும் அணைத்து செய்திதாள்களில் வந்தது . வழக்கு என்ன ஆனது .கேள்வித்தாள் தரம் முடையதாகவும் விடைகளில் மாற்றம் இல்லாததாகவும் இருக்கவேண்டும் .கேள்வித்தாள் வல்லுனர்கள் விளையாட எங்களது வாழ்கை தான் கிடைத்ததா.2012& 2013 இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற முதுகலை மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் பிரச்சினை இல்லாமல் நடைபெற்று இருக்கிறதா .ஒரு சில மதிபெண்ணில் தோல்வியடைந்தவர்கள் விடை தவறை சுட்டிக்காட்டும் போது ஏற்க தவறுவது ஏன். இது போல் சென்ற ஆண்டு தேர்விலும் கின்னர மிதுனம் என்பதற்கு கிண்ணரமிதுனம் என்று கேட்டபட்டது . வல்லுனர்கள் எந்த விடை எதிபார்கிறார் என ஊகித்து விடை தவறாக இருந்தாலும் எழுதவேண்டும் . [நான் தேடியவரை அபிதான சிந்தாமணி முதல் அணைத்து தமிழ் அகராதியிலும் கிண்ணரமிதுனம் என்று இல்லை .இது போல அறிவுசார் வளர்ச்சி கோட்பாடு குழந்தையின் எந்த பண்புகளை முக்கியதுவ படுத்துகிறது .TRB விடை முதிர்ச்சி [.maturation .]
    ஆனால் கொடுக்க பட்ட விடைகளில் ஒன்றை தவிர அனைத்தும் பொருந்தும் .
    Maturity (psychological)From Wikipedia, the free encyclopedia
    In psychology, maturity is the ability to respond to the environment in an appropriate manner.சமூக சார்புடைமை என்பதே சரியான விடை .ஒரு வார அவகாசத்தில்
    TRB கொடுத்தோம் நிராகரிக்க பட்டது .கேள்வித்தாள் தயாரிக்கும் வல்லுனர்களே நாங்கள் பி.எட் படித்துள்ளோம் .எங்களுக்கு பல்கலை கழகம் அங்கீகரிக்கும் நூல்களில் இருந்து எடுங்கள் .எங்கள் வாழ்கையோடு விளையாட வேண்டாம் . வேதனையுடன

    ReplyDelete
    Replies
    1. Ungaluku yen salem and dharmapuri mel evalavu kaduppu. Yen kalvil pin thangiyavargal munneyra kudatha.chennai mattumey munneyra venduma.nangal enga joba vittutu padichom.ethuvaraikum jobla joint pannala rompa kastapadarom. Ninga yennadana salem first chennai last? Comment ipdi kudukkuringa. Nanga pona tetla 88 apdiey udanchidama intha tet la pass pannitom.so mind ur words.

      Delete
    2. Ungaluku yen salem and dharmapuri mel evalavu kaduppu. Yen kalvil pin thangiyavargal munneyra kudatha.chennai mattumey munneyra venduma.nangal enga joba vittutu padichom.ethuvaraikum jobla joint pannala rompa kastapadarom. Ninga yennadana salem first chennai last? Comment ipdi kudukkuringa. Nanga pona tetla 88 apdiey udanchidama intha tet la pass pannitom.so mind ur words.

      Delete
    3. Dear sir,

      Don't angry with this brother. What did you understand by reading the news? That brother mentioned about leak of question paper before tet exam. You know already tet question paper leaked before tet exam. So don't make diversity in district wise

      Delete
    4. ராமகிருஷ்ணன் சார் ,தருமபுரி தகுதி தேர்வு கேள்விதாள் சர்ச்சையில் நடந்து இளையராஜா போன்றோர் கைது செய்யப்பட்ட செய்தி அனைத்து செய்தி தாள்களிலும் வந்தது .ஒருசில மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தவர்கள் வேதனையுற குறுக்கு வழியில் மதிப்பெண் பெறுவதை ஏற்று கொள்ள முடியாது . தவறுதலாக புரிந்து கொள்ளவேண்டாம் .மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

      Delete
    5. fail agita question out agiruchu nu solla thaan seivanga pa, pass panniruntha itha patthi vaaiyave thiraka maatanga. Ilayaraja va patthi soldravanga nalla purinjukanum, avanga oru mosadi kumbal, tet exam a vachu yaara yemathi money sambathikalam nu ninachavanga, avangale oru question a ready panni trb question nu solli niraya pera yemathirukanga, but athukum trb keta question kum sammanthama illa, purinjukonga, district a thappa pesathinga,........

      Delete
    6. TAMIL +1 book la theduna kinnara mithunangal kidaikum agarathilam thevai illai..

      Delete
    7. All of u note me. Question paper leak anathu newsla vanthathu theyrium. Nan ipa 89 mark than and paper 2 la pass.ana ninga peysarathu salem mavattam fulla question paper leak agi than pass panni irukaramathiri comment panuringa. Vidiya vidiya padichavanga mannasa gayapaduthathinga. Nan ethukaka job vitu 6 month aguthu. Innum jobku pogalarompa kastama iruku.

      Delete
  6. TODAY TET REVALUATION PROVISIONAL LIST PUBLISHED. ALL THE BEST TET TEACERS.
    OFFICIAL NEWS......

    ReplyDelete
    Replies
    1. yen ungalukku nindha velai

      Delete
    2. avanguluku vera velai illai sir athan intha mathiri false news spread pannaranga.

      Delete
  7. Pepar 1 revaluation unda frients please reply

    ReplyDelete
  8. Revaluatian yellarukkuma illa case pottavangalukkumattuma.

    ReplyDelete
  9. TODAY TET REVALUATION PROVISIONAL LIST PUBLISHED. ALL THE BEST TET TEACERS.
    OFFICIAL NEWS

    Note:
    Dear sir,
    Please update your news after confirming. Otherwise do't give news. This news is not published by TRB. TRB is not considered about revaluation of tet result. But you have told that revaluation list will be released today. So I request you all before publishing the news please make sure. This news is sure means good. Do't publish rumor news.This will effect others for the news. What is your benefit, publishing likes this news. Do't hurt others.

    ReplyDelete
    Replies
    1. eppa pathalum rumoura kilapurathe velaiya pochu

      Delete
  10. Yann sir false news veduranga . Nan intha 04428269968 kku call panninan Innum one month akum enkirarkal .Please dont spread false news 10:42 AM person

    ReplyDelete
  11. Yann sir false news veduranga . Nan intha 04428269968 kku call panninan Innum one month akum enkirarkal .Please dont spread false news 10:42 AM person

    ReplyDelete
  12. cv epponu solluinkappa plz .romba tensiona erukku

    ReplyDelete
  13. Qus:manvalathai pathukaka manithan edukum muyarchi?
    ans: trb la first pota result (manvalam pathukathal)
    final result la (thavarankalai valarthal)
    rendukum mark trb thanthanka.
    so,booka nalla parunga , ansara thapunu sollathinga.
    But vijayalakshmi sonna ansarum varum.
    trb muthala nalla question prepar ponnunga?appuram exam callform panunga.

    ReplyDelete
  14. Tet ku cv yapppa sir natakum

    ReplyDelete
  15. Dear friends humble request to all of u. Am devi from trichy district . Am passed in paper 1. Weitage 79. 2008 seniority. Belongs to oc community. So am decided to move management school. Whereever vacancy in aided school in tamilnadu am ready to pay donation an join in job. So pls pls pls pls pls inform if any vacancy in aided school pls inform. Its a huge help to me. Kothandam sir saranya madam safiya madam and all of u please giv a life to me by ur information. Thank u.

    ReplyDelete
  16. Paper II, Social science, Vande mathram, Ans. Bengali correct proof yennidam ulladu call me no. 9865750703

    ReplyDelete
  17. suprmecourt order-thaguthi thervu mathipen kuraipu manu thallupadi

    ReplyDelete
  18. Tet cv mutinjiruchu

    ReplyDelete
  19. where is all trb pg candidates please share the other subjects case status and what is going on

    ReplyDelete
  20. sir, question no.125 question serios D paper II justice S.Nagamuthu kodutha judgement the winds blow from the particular direction answer A,B,D but neenga publish panathu A,B,C. so change it
    sir, question numberum thavaraga pottu ulleer so change it. thank you.
    AnonymousDecember 19, 2013 at 11:08 AM

    kalvi seithiyil thavarana thagaval velivanthullathu justice S.Nagamuthu kodutha judgement copyil A.B.D enru than ullathu question no.125 question serios D the winds blow from the particular direction entra kelvikku A.B.C entru seithi veliaggi ullthu varuthamaga ullathu. so change it.
    Reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி