முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமன தேர்வு முடிவை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2013

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமன தேர்வு முடிவை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு.


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முடிவை வெளியிட, ஐகோர்ட் கிளை, "பெஞ்ச்' உத்தரவிட்டது.
மதுரை, புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமனத் தேர்வில், "பி'வகை வினாத்தாளில்,
47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டார். திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார். அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவில், "தேர்வு எழுதியவர்களுக்கு, டி.ஆர்.பி., அநீதி இழைத்துள்ளது.

ஒரே தீர்வு, மறு தேர்வு தான்.

ஜூலை, 21ல் நடந்த தமிழாசிரியர்கள் நியமனத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. டி.ஆர்.பி., ஆறு வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும்' என்றார். இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், "பிழையான வினாக்கள் இடம் பெற்றதாக, இருவர் மட்டுமே மனு செய்துள்ளனர். அச்சுப்பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை. மறு தேர்வு நடத்தினால் காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள், ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன், "பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது."தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிடலாம். விஜயலட்சுமி, அந்தோணி கிளாராவிற்கு, தலா, 21 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவர்களுக்காக,இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். டி.ஆர்.பி., செயலர், டிச., 20ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

10 comments:

  1. Is there any chance the above petitioner to get job?

    ReplyDelete
  2. Case potta 21 marka mathavanga kathi

    ReplyDelete
  3. Next aapu for tet case arasiyala ithellam saatharanam paa

    ReplyDelete
  4. varavairkathakka muduvu bc ku cutoff yavalo varum prabakaran

    ReplyDelete
  5. Only two person asked their right they spend more money for that so court ordered to give mark for them.

    ReplyDelete
  6. sir,
    anybody know the cutoff marks of tamil I got 90 marks bc female 1977 can I any chance

    ReplyDelete
  7. IN Tamil PG TRB Vedial coching centre Says: BC Gens =95 Female= 90

    ReplyDelete
  8. sir how do calculate the cut off mark

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி