தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களுக்கு பரிந்துரை செய்யும் வகையில் தகுதியுள்ள பதிவுதாரர்கள் தங்களதுவிபரத்தை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்து கொள்ள வேண்டுமென
வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா கேட்டு கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிப்போர், ஏதேனும் ஒரு பட்ட படிப்புடன் டெக்னிக்கல் எஜூகேஷன் இயக்குனரால் வழங்கப்படும், கம்ப்யூட்டர் ஆன் ஆஃபீஸ் ஆடோமேஷன் பிரிவில், சான்றிதழோ அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., படித்திருக்க வேண்டும்.மேலும் 2013ல், ஜூலை, ஒன்றாம் தேதி அனைத்து பிரிவினரும், 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 35 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 32, பொது பிரிவினர், 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும்அவர்களை சார்ந்த வாரிசுதாரர்கள் அனைத்து பிரிவினை சார்ந்த அனைத்து மனு தாரர்களும் முன்னுரிமை உள்ளவர்கள்.உத்தேச பதிவு மூப்புக்குள் உள்ள பதிவுதாரர்கள், நாளை மாலை, 5 மணிக்குள் கல்வி சான்றுகள், இணை தளம் வழியாக எடுக்கப்பட்ட வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஜாதிசான்று ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து, தங்களது பெயர் பட்டியலை சரிபார்த்து கொள்ள வேண்டும்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, புதுப்பித்தல், பரிந்துரைத்தல் போன்ற பணிகள்அனைத்தும் இலவசம். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி