ஒரே ஆசிரியர் பள்ளிகளில் வீணாகும் உடற்கல்வி பாடம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2013

ஒரே ஆசிரியர் பள்ளிகளில் வீணாகும் உடற்கல்வி பாடம்.


மதுரையில், அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே இருப்பதால் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.250 மாணவர்களுக்கு
ஒரு உடற்கல்வி ஆசிரியர், பள்ளிக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் என்ற அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் வரை பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரம் மாணவர்கள் இருந்தால் நான்கு உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குனர் பணியமர்த்தப்பட்டனர்.அரசாணை மாற்றப்பட்டு, பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் இருந்தாலும், இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குனர் என்ற முறை கொண்டுவரப்பட்டது. அதன்படிகூட, பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்வி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர்தான் உள்ளார்.மாணவர்களை ஒழுங்குபடுத்துவது, விளையாட்டு கற்றுத்தருவது, போட்டிகளுக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளைச் செய்வதற்கு, ஆசிரியர்கள் இல்லை.

மதுரை மாவட்டத்தில் மொத்தமே 8 உடற்கல்வி இயக்குனர்கள் தான் உள்ளனர். மீதிப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசுப் பள்ளிகளில் 32, உதவி பெறும் பள்ளிகளில் 39 மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் 18 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.உடற்கல்வி ஆசிரியர் இருந்தால்தான், மாணவர்களுக்கு முறையான உடற்பயிற்சிகளை சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அதற்கான பாடவேளை வீணாகும். தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படுவதால், விளையாட்டின் அவசியத்தை மாணவர்கள் உணரக்கூட முடிவதில்லை. ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல வேண்டாம்; உள்ளூர் போட்டிகளில் தயாராவதற்கு கூட பயிற்சி வேண்டுமே. மற்ற பாட ஆசிரியர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை, உடற்கல்வி பணியிடம் நிரப்புவதிலும் அரசு அக்கறை காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி