வங்கி அதிகாரி தேர்வு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2013

வங்கி அதிகாரி தேர்வு...


பொதுத் துறை வங்கிகளில் உள்ள சிறப்பு அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கான பொதுஎழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பை Institute of Banking Personnel Selection (IBPS) வெளியிட்டுள்ளது. இதன்படி
தகவல் தொழில்நுட்ப அதிகாரி, வேளாண் கள அதிகாரி, சட்ட அதிகாரி, மனித வள அதிகாரி,மார்க்கெட்டிங் அதிகாரி, பட்டய கணக்காளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 20 -35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பில் சலுகை உண்டு.பொறியியல் பட்டப் படிப்பு, வேளாண் பிரிவில் பட்டப் படிப்பு, எம்.பி.ஏ., சி.ஏ., என்று விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ப சிறப்புத் தகுதி தேவை. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி உள்ளிட்ட மையங்களில் தேர்வுகள் நடைபெறும். இந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்க ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். இத்தேர்வுக்கு டிசம்பர் 14ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://www.ibps.in/career_pdf/Draft_ad_Specialist_Officers_III.pdf என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி