ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2013

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு.


பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ்2 வகுப்பில் சிறப்பாக
செயல்படும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகளை, சி.டி.,களில் பதிவுசெய்து, அவற்றின் மூலம் மற்ற பள்ளி மாணர்களுக்கு கற்பிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து, வீடியோ, ஆடியோ கட்சி பதிவுகளை கல்வித்துறை கோரி உள்ளது.

இதில் பதிவு செய்யப்படும் காட்சிகள் எந்த காலத்திலும் பயன்படுத்தும் விதமாகவும், மற்ற ஆசிரியர்கள் தங்களது கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும்.தனிமனிதன், நிறுவனம், சாதி, மதம் சார்ந்ததாக இருக்க கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றை ஜன., 10க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை, சி.டி.,களில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி