பழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2013

பழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும்


விடுமுறை நாட்களை குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக புதுவை மாநில பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் பாரி விடுத்துள்ள
அறிக்கை:

புதுவை கல்வித்துறையில் இருந்து பள்ளிகளுக்கு முதலில் வந்த சுற்றறிக்கையில் ஜனவரி2முதல்10வரைய விடுமுறை எனவும், 11, 12ம்தேதி பள்ளிகள் இயங்கும் எனவும், 14,15,16ம்தேதி பொங்கல் விடுமுறை எனவும், 17ம்தேதி முதல் பள்ளிகள் இயங்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. பின்னர் வந்த சுற்றறிக்கையில் ஜன.2முதல்11வரை பள்ளிகள் இயங்கும் எனவும், 12முதல்20வரை அரையாண்டு விடுமுறை எனவும், 21ம்தேதி முதல் பள்ளிகள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவெனில்12முதல்20வரை உள்ள நாட்களில்2நாட்கள் சனிக்கிழமை, 2நாட்கள் ஞாயிற்றுக்கிழமை, 3நாட்கள் பொங்கல் விடுமுறையாகும்.

இந்த நாட்களை கழித்து பார்த்தால் அரையாண்டு விடுமுறையாக கல்வித்துறை அறிவிப்பது வெறும்2நாட்கள் மட்டுமே.மேலும் ஜன.2முதல்11ம்தேதிவரை பள்ளிகள் எப்படி இயங்கும் என்பதை கல்வித்துறை கட்டாயம் தெளிவுப்படுத்த வேண்டும்.1முதல்8ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய3ம் பருவ பாட புத்தகங்கள் இன்றி வகுப்புகள் நடைபெறும். இதுதான் உண்மை நிலை.இதுமட்டுமின்றி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் அதேநாளில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி என்று கூறியிருப்பது மற்றொரு அவலநிலையாகும். மேலும் அந்த நாள் பள்ளியின் வேலைநாளாம். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் அந்த நாளை பள்ளியின் வேலைநாளாக கணிக்கும் இந்தபோக்கு புதுவையில் மட்டுமே அரங்கேறுகிறது. இவையெல்லாமே அந்த220வேலை நாட்களில் பள்ளியை நடத்த துறை எடுக்கும் அவலநிலையாகும்.எனவே அரையாண்டு விடுமுறையை பழைய முறைப்படி ஜன.1முதல்17வரை அறிவிக்க வேண்டும். மாணவர்கள்,ஆசிரியர்களின் மனநிலையை உணர்ந்து பள்ளி கல்வித்துறை செயல்பட வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு மாணவர்கள்,ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி