உடற்கல்வி, ஓவியம், தையல், இசை சிறப்பு ஆசிரியர் பணியிடம் நிரப்ப டிஆர்பி அலுவலகத்தில் முற்றுகை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2013

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை சிறப்பு ஆசிரியர் பணியிடம் நிரப்ப டிஆர்பி அலுவலகத்தில் முற்றுகை.


உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை டிஆர்பி உடனடியாக நிரப்ப கோரி சிறப்பு ஆசிரியர்கள் நேற்று டிஆர்பி அலுவலகம்
முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள டிஆர்பி அலுவலகம் முன் சிறப்பு ஆசிரியர்கள் நேற்று காலை திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதாக அறிவித்து 17 மாதங்கள் ஆகியும் நியமனம் செய்யாததை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.இதுகுறித்து அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் ராமர் கூறியதாவது: கடந்த மே 8ம் தேதி டிஆர்பி, அரசாணை 177ன்படி பள்ளிக் கல்வி சிறப்பு விதிகளின் கீழ் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்தது. பதிவு மூப்பு அடிப்படையில் இது நடக்கும் என்றும் தெரிவித்தது. 440 உடற்கல்வி ஆசிரியர்கள், 196 ஓவிய ஆசிரியர்கள், 137 தையல் ஆசிரியர்கள், 9 இசை ஆசிரியர்கள் என மொத்தம் 782 பணியிடங்கள் நிரப்பஉள்ளதாக அறிவிக்கப்பட்டது. 17 மாதங்களாகியும் அதற்கான பணியை டிஆர்பி தொடங்கவில்லை.

மாநில பதிவு மூப்பு பட்டியல்களை வெளியிட்டு உடனடியாக சான்று சரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தோம்.ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பணிகளை முடித்துவிட்டுத்தான் இந்த பணிகளை தொடங்குவோம் என்று டிஆர்பி தலைவர் கூறுகிறார். இதில் முதல்வர் தலையிட்டு சான்று சரிபார்ப்பு தொடங்க உத்தரவிடும்படி மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ராமர் தெரிவித்தார்.முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் டிஆர்பி தலைவர் விபுநய்யார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி