டிஜிட்டல் மயமாகும் என்.சி.சி., பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2013

டிஜிட்டல் மயமாகும் என்.சி.சி., பயிற்சி


தேசிய மாணவர் படை திட்டத்தில் சேரும், மாணவர்களுக்கான பயிற்சி திட்டம், சி.டி.,க்களாக வழங்கப்பட உள்ளது" என திருச்சி என்.சி.சி., கமாண்டர் தினகரன் தெரிவித்தார்.காரைக்குடி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில்,
பள்ளி, கல்லூரி என்.சி.சி., மாணவர்களுக்கான, ஆண்டு இறுதி முகாம் துவக்க விழா நடந்தது. பள்ளி தாளாளர் எஸ்.பி.,குமரேசன் வரவேற்றார். முதல்வர் ரமேஷ் முன்னிலை வகித்தார். என்.சி.சி.,கமாண்டர் தினகரன் கூறியதாவது;இந்தியா முழுவதும் 13 லட்சம் என்.சி.சி., மாணவர்கள் உள்ளனர். கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதில், கிராமப்புற, மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளே, முழு செலவையும்ஏற்றுக்கொண்டால், அப்பள்ளியில், என்.சி.சி., ஏற்படுத்த முன்னுரிமை தரப்படும். செட்டிநாடு பப்ளிக் பள்ளி, இதற்காக விண்ணப்பித்துள்ளது.வருகிற கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்த பாடத்திட்டம், "டிஜிட்டல்" மயத்தில் சி.டி.,யாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம்,என்.சி.சி., பயிற்சியை, எளிதில் கற்று கொள்வார்கள். கல்லூரி அளவிலான 2 ஆண்டு பயிற்சி, தற்போது 3 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி