ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவருக்கும் ஒரே அறையில் பாடம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2013

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவருக்கும் ஒரே அறையில் பாடம்.


தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே அறையில் பாடம் நடத்தப்படுவது ஆய்வில்
தெரியவந்துள்ளது. சமகல்வி இயக்கத்தின் சார்பில் வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறைபள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதற்கான வெளியீட்டுவிழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்.

ஆய்வு அறிக்கை குறித்து சமகல்வி இயக்கத்தின் பொதுச் செயலாளர் செல்வகுமார் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் உள்ள மாவட்டங்களை கணக்கில் கொண்டும் தமிழகத்தில் பட்டியல் இனத்து மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் 90 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை மாதிரிகளாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி பெரும்பாலான பள்ளிகளின் இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பள்ளியின் சொத்துகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளன. 53 சதவீத பள்ளிகளில் போதுமான வகுப்பறை வசதிகள் இல்லை. ஒரே வகுப்பறையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்படுகின்றன. 50.6 சதவீத பள்ளிகள் சுமாரான தரத்தில் தான் உள்ளன. 29 சதவீத பள்ளிகட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து பாதுகாப்பற்ற அபாயகரமாக உள்ளன. 17 சதவீத பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. அதனால் இரவு நேரங்களில் பள்ளிகள்ஆடு மாடுகள் தங்கும் இடமாகவும், நாய்கள் படுத்து உறங்கும் இடமாகவும் மாறியுள்ளன. 90 பள்ளிகளில் 57 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை.

26 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. 55 பள்ளிகளில் கழிப்பறை இருந்தும் தண்ணீர் வசதி, கதவு வசதி இல்லை. அதனால் பள்ளியின் அருகிலேயே திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. 56 தொடக்கப்பள்ளிகளில் 11 பள்ளிகளில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். 24 பள்ளிகளில் 20ல் இருந்து 30 குழந்தைகள் வரை படிக்கின்றனர். 18 பள்ளிகளில் 10 முதல் 20 குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் வரை 76 சதவீத பள்ளிகளுக்கு கல்வி சாதனங்கள் வழங்கப்படவில்லை. நடப்பு ஆண்டில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவ மாணவியருக்குசீருடை வழங்கப்படவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பெரும்பாலான நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில பாட வாரியான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த பள்ளிகள் அனைத்தையும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே இந்நிலை மாறும்.


    தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி