இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் வருகிற செவ்வாய்கிழமை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2013

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் வருகிற செவ்வாய்கிழமை உத்தரவு.


தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்களின் முன்னிலையில் பத்தாவது வழக்காக விசாரணைக்கு வந்தது. ஆசிரியர்கள் சார்பில் வழக்கறிஞ்சர் அஜ்மல் கான் அவர்கள் வாதிட்டார்.அரசு தரப்பில்
கால அவகாசம் கோரப்பட்டது, ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞர் ஏற்கெனவே அரசு தரப்பில் கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் தெளிவாக எடுத்து உரைத்தார், ஆகையால் இனி கால அவகாசம் தர கூடாது என வாதம் எடுத்து வைக்கப்பட்டது. இதையடுத்து வருகிற செவ்வாய்கிழமை அன்று உத்தரவு போடுவதாக நீதியரசர் கூறியுள்ளதாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் திரு.கிப்சன் தெரிவித்தார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி