பள்ளிக் கல்வித்துறையில் உள்ளது போல், உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க, கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் கடந்த பல ஆண்டுகளாக
போராடி வருகின்றனர். கடந்த 2011ல்
கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, மதுரை இணை இயக்குநர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 5 மேற்பார்வையாளர்களுக்கு பதிலாக, உதவி தொடக்க கல்வி அலுவலர்களை நியமிக்க ஆணை பிறப்பித்தது. அந்த ஆணை கண்டுகொள்ளப்படவில்லை. இதனிடையே சமீபத்தில் ஆசிரியர் கூட்டணியின் பிரதிநிதிகள் சென்னையில் அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர். உடனடியாக உத்தமபாளையம் சரகத்திற்கு, உதவி தொடக்க கல்வி அலுவலர் நியமிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 3 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்ளை கொண்ட பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.
பட்டியல் வெளியிடப்பட்டு 2 மாதங்களை கடந்தும், உதவி தொடக்க கல்வி அலுவலர் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பாக விவாதிக்க கள்ளர் பள்ளி கிளையின் வட்டார செயற்குழு கூட்டம், தலைவர் சேதுமல்லையராஜா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தீனன், பொருளாளர் ராஜ்குமார் வரவேற்றனர். கம்பம் வட்டார செயலாளர் முருகன், ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் சிவாஜி கலந்து கொண்டனர். வரும் டிச., 19 ல், கம்பத்தில் கோரிக்கை ஊர்வலம் நடத்துவது என்றும், அப்போதும் நியமிக்காவிட்டால், மாநிலம் முழுவதும் 3000 ஆசிரியர்களை திரட்டி, கள்ளர் சீரமைப்புத்துறை அலுலகத்தை முற்றுகையிடுவது, என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர் தலைவர் முருகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி