பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அரசு அலுவலர்களுக்கு தடை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2013

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அரசு அலுவலர்களுக்கு தடை?


அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி தடைவிதிக்க இருப்பதாகத் தெரிகிறது.உள்ளார்ந்த தகவல்களை (insider trading) வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்பவர்களைத்
தடுப்பதற்கான புதிய விதிமுறையை பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி கொண்டுவர இருக்கிறது. இதில் அரசு அலுவலர்கள் மற்றும் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.இது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று செபி தெரிவித்திருக்கிறது. இதன் படி செபியின் அதிகாரிகள் கூட பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. செபியின் பணியாளர்கள் யாரும் தங்களின் பதவிக்காலம் முடியும் வரை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது.மேலும் கார்ப்பரேட் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், கொள்கைகளை உருவாக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இந்தவிதிமுறைகளை கேரளம் மற்றும் கர்நாடகம் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்.கே.சோதி தலைமையிலான குழு உருவாக்கி இருக்கிறது.கடந்த மார்ச் மாதம் செபி இந்தக் குழுவை அமைத்தது. இந்த கமிட்டி கடந்த 20 வருட உள்ளார்ந்த முறைகேடு நடந்த தகவல்கள் அடிப்படையில் புதிய விதிமுறையை உருவாக்கி இருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி