ஆய்வக கருவிகளில் தரமில்லை: தலைமை ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2013

ஆய்வக கருவிகளில் தரமில்லை: தலைமை ஆசிரியர்கள்.


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின்அறிவியல் ஆய்வகங்களுக்கு தரமில்லாத ஆய்வககருவிகள் வழங்கப்படுவதாக தலைமைஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம்
(ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் 2009 முதல் அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம்வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 7,000பள்ளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.இந்த நிதியில் ரூ.25 ஆயிரத்திற்கு ஆய்வக கருவிகளும்,ஐந்தாயிரம் ரூபாயில் நூலகத்திற்கு புத்தகங்கள்வாங்கப்பட வேண்டும்.

மீதமுள்ள ரூ.20ஆயிரத்தில்,தளவாட சாமான்கள், தொலைபேசி, இன்டர்நெட்கட்டணம், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள்மேற்கொள்ள வேண்டும். ஆய்வக கருவிகளை, சிலகுறிப்பிட்ட நிறுவனங்களில்தான் வாங்கதலைமை ஆசிரிகளை ஆர்.எம்.எஸ்.ஏ., அதிகாரிகள்வற்புறுத்துகின்றனர். இதனால், அவர்கள் குறிப்பிடும்நிறுவனங்களில் மட்டுமே தலைமைஆசிரியர்கள் ஆய்வககருவிகளை வாங்கி வருகின்றனர். அந்த நிறுவனங்களால்வழங்கப்பட்ட பெரும்பாலான ஆய்வக கருவிகள்தரமில்லாமல் உள்ளன. தவிர, மூன்று ஆண்டுகளாகதொடர்ந்து ஒரே மாதிரியானபொருட்களே வழங்கப்படுகின்றன. இதனால்,அவை அனைத்தும் பள்ளி ஆய்வககூடங்களிலே பயன்பாடின்றி குவிந்துஉள்ளன. ஆனால்,தேவையான சிலபொருட்களை.விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாகதலைமைஆசிரியர்கள்புலம்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி