பிறந்த நாள் கேக்கில் மெழுகுவர்த்திக்கு தடை: மத்திய அரசு பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2013

பிறந்த நாள் கேக்கில் மெழுகுவர்த்திக்கு தடை: மத்திய அரசு பரிசீலனை


பிறந்த நாள் போன்ற விழாக்களில், கேக்கின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி, அணைப்பதற்கு, தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. லோக்சபாவில், நேற்று முன்தினம், எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் அளித்த பதில்:
ஆஸ்திரேலியாவில், கேக் மீது வைக்கப்பட்ட, எரியும் மெழுகுவர்த்தியைஅணைக்கும் போது, அதில் இருந்து விழும் துகள்களால், நோய் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர். அதையடுத்து, கேக் மீது, மெழுகுவர்த்தியை அணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின், தேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. மேலும், பிறந்த நாள் போன்ற விழாக்களுக்கு, 'கப் கேக்' வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி