ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம்: தமிழக அரசுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம்: தமிழக அரசுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.


ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சதகுதி மதிப்பெண்ணுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப, தமிழக அரசின்சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.அரசு குறிப்பிட்டுள்ள அடிப்படை தகுதியுள்ள நபர்கள்,இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதின் மூலம், அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம். தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம்,60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என, மாநிலஅரசு தெரிவித்துள்ளது. மாநில அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்களே, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என, அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மாநில அரசின் குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும், மாநில அரசின் இந்தநடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தகுதித் தேர்வுகளில் குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயிப்பது மாநில அரசின் உரிமை என்றும், இதில் சுப்ரீம் கோர்ட் தலையிடமுடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

26 comments:

  1. Is there any other case regarding TET? When is CV ?

    ReplyDelete
  2. Nice Judgement to all the Hard workers & the dedicated Candidates ( Teachers ) like me.

    ReplyDelete
  3. Good judgement.. when is C.V. if anyone knows weightage to all subject.. plz let everyone know.. Hard work never fails

    ReplyDelete
  4. good news then when will be CV for Paper 2

    ReplyDelete
  5. Good news.thiramaikku velai kodu.all compatision examku ithe mudivu edukka vendum

    ReplyDelete
  6. good JUDGEMENT.no caste in tamilnadu all castE are same .THIRAMAIKKU VELAI KODU.
    NO RESERVATION

    ReplyDelete
  7. Tet cv ellam mutinjichuruchunga

    ReplyDelete
  8. Ena GOOD Judement CV Work Parunge By CV Canditates

    ReplyDelete
  9. ithu ethir paartha ondru thaan. trb mela entha case potalum jaikirathu kastam, 99% trb ya asaika mudiyathu

    ReplyDelete
  10. Tet marksla reservation kudathu. Bt mathapadi ida othukeedu usualla pani niyamanathla follow pandradhudhan sattam. Hello mr. Ipa mattum all caste are same soldringa bt unga oorla "theendamai" muzhusa ozhinchiduchinu solamudiuma?

    ReplyDelete
  11. Appa caste illaiya community certificate vendam ok

    ReplyDelete
  12. Tet case come high court on wednesday

    ReplyDelete
  13. Dear frnds sattappadi ella postingskum castewise reservation kandipa follow panithan aaganum. Bt indha casela ena soldranganna. Tetla endha caste irundhalum min.90 marks eduthe aaganum idhula endha castkum relaxation kedaiyadhu thats all

    ReplyDelete
  14. Yes all're waiting for wednesday judgement

    ReplyDelete
    Replies
    1. Which cases are came for hearing sir plz

      Delete
    2. 20000 cv completed candidates asking job...

      Delete
  15. What case Wednesday

    ReplyDelete
  16. Sir 87,88,89 canditate potta case...athavathu avanga answerla doubtnu case pottanga illa antha case vara poguthu on coming wednesday sir....postingla caste follow pannuvanga sir bt mark relaxation tharamattanga all r wants to get 90 marks

    ReplyDelete
  17. Cv yappatha nadakum yappatha athuku date sollu vanga

    ReplyDelete
  18. நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "2012 13ம் ஆண்டுக்காக, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 2,800 முதுகலை ஆசிரியர் பணியிடம் உட்பட, 15 ஆயிரம் பணியிடங்களை, டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, 3,500 பணியிடங்களை நிரப்பவும் வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்தன. மொத்தத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 18,500 பேர் நிரப்பப்பட உள்ளனர்.

    ReplyDelete
  19. Thanks ur information

    ReplyDelete
  20. bt 10000 thana palaiya vacancy ippa 980 thana so 11000 per than bt teaachers poda porangala appa meethi 2500 per nilaimai enna vacancy sariya kattalapa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி