தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2014

தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது!


தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு முடிவை மேலும் ஒரு மாதம் தள்ளிவைத்து வெளியிட, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளதாக,
தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்காக நடந்த தேர்வை, 12.21 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என,கூறப்பட்டது. குரூப் - 4 தேர்வை, பட்டதாரிகளும் எழுதியுள்ளனர். இவர்கள், குரூப் - 2 தேர்வையும் எழுதியுள்ளனர்.2012ல் நடந்த குரூப் - 2 தேர்வில், நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவை, இன்னும், தேர்வாணையம் வெளியிடவில்லை. குரூப் - 2 தேர்வு முடிவிற்கு முன், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட்டால், முதலில், கிடைத்த வேலையில் சேரலாம் என,முடிவெடுத்து, பட்டதாரிகளும், குரூப் - 4 வேலையில் சேர்வர்.

பதவி உயர்வு :

பின், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிடும்போது, அதில் தேர்ச்சி பெற்றால், குரூப் - 4 வேலையை கைவிட்டு, அதிக சம்பளம், விரைவாக, அதிகாரி நிலைக்கு பதவி உயர்வு ஆகிய சிறப்புகளை கொண்ட, குரூப் - 2 வேலைக்கு வருவர்.இதனால், குரூப் - 4 நிலையில், மீண்டும் காலி பணியிடம் ஏற்படும். இதற்கு, மீண்டும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டியிருக்கும். இந்த சிக்கலை மனதில் கொண்டு,முதலில், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிட்டு, பணி நியமனம் வழங்கியபின், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, தேர்வாணையம் திட்டமிட்டு உள்ளது. குரூப் - 2 சான்றிதழ் சரிபார்ப்பு, இரு வாரம் வரை நடக்கும் என்பதால், 20 நாள் முதல், 25 நாள் கழித்தே, குரூப் - 4 தேர்வு முடிவு வெளியாகும் என,துறை வட்டாரங்கள், தெரிவித்தன.

7 comments:

  1. Group 4 result vandhaa maadiri thaan...

    ReplyDelete
  2. maths friends i send cv attended list district vice.( some district missing) u can see in the mail.
    mail id: tetpaper2maths@gmail.com pass word: erodeerode. i m suresh from erode. my cel no 9842437071. friends u too mail ur district maths cv attented list. thank u.

    ReplyDelete
  3. Udhayachandran IAS eppothu TNPSC secretary postil irunthu matrinarkalo appothe athan nampaga thanmai poyvittathu. Nermai ku mathipu illai.

    ReplyDelete
  4. Chairman navneethan is just like puppet

    ReplyDelete
  5. Theliva news declare pannuga,group 4 result varuma?eppo? before election and after election when will time came to result.please reply me

    ReplyDelete
  6. please reply me? when ll came to Group 4 result.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி