திருவள்ளுவர் பல்கலைக்கு 12பி அந்தஸ்து வழங்க யு.ஜி.சி. முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2014

திருவள்ளுவர் பல்கலைக்கு 12பி அந்தஸ்து வழங்க யு.ஜி.சி. முடிவு.


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு 12ஆ அந்தஸ்தை வழங்குவதற்கான முடிவை க்எஇ எடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அப்பல்கலைக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
UGC வட்டாரங்கள் கூறியதாவது:

திருவள்ளுவர் பல்கலைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்று ஆய்வுசெய்த நிபுணர் குழுவின் அறிக்கையை UGC ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கையில், 12B அந்தஸ்தைப் பெற திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தகுதியானது என்று கூறப்பட்டிருந்தது.இதன்மூலம் அப்பல்லைக்கழகம், UGC -ன் நிதியுதவியைப் பெற முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக திருவள்ளுவர் பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: எங்கள் பல்கலைக்கு இது ஒரு பெரிய வெற்றி. நாங்கள் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம். மேலும், NAAC அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நாங்கள் கடின முயற்சி எடுப்போம்.மேலும், UGC -உடன் இணைக்கப்பட்ட தொலைநிலைக் கல்வி அமைப்பின் மூலமாக, அஞ்சல் வழிக் கல்வியை நடத்துவதற்கு நிதி உதவி கோரப்படும். ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெறுவதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி