தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1339 பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1339 பேர் தேர்ச்சி.


தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங் கியது.

சான்றிதழ் சரிபார்ப்பு

தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலை மையில் கல்வித்துறை அதிகாரி கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முன்னின்று நடத்தினார்கள்.இந்த பணியில் 8 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த கலந்தாய்வில் முதல்தாளில் 417 பேரும், 2-ம் தாளில் 922 பேரும் பங்கேற்கிறார்கள். வருகிற 27-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.

நியமன ஆணை

இந்த பணி முழுமையடைந்த பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான ஆவணங்கள் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் பின்னர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங் கப்படும். பணி நியமனம் பெறு பவர்கள் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை பாடம் நடத்த உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி