அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் 17 முறை நீண்ட விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2014

அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் 17 முறை நீண்ட விடுமுறை.


இந்த ஆண்டின் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்து அரசு விடுமுறை
தினங்கள் ஞாயிற்றுக்கிழமையிலும்,மற்றொரு அரசுவிடுமுறை நான்காவது சனிக்கிழமையிலும் வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,இதில் ஒரு உபரி தகவலாக ஒரு நாள் அதிகப்படியான விடுமுறை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் ஒருவர்17வார விடுமுறைகளை நான்கு அல்லது ஐந்து தினங்கள் கொண்ட நீண்ட விடுமுறைக் காலமாக அனுபவிக்கமுடியும் என்பதுவும் கூறப்படுகின்றது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இதுபோன்ற நீண்ட விடுமுறை வாய்ப்புகள் ஏழு முறை அதிகமாகக் கிடைக்கின்றன. அதனால் விடுமுறை சுற்றுலாக்கள் குறித்த அதிக விசாரணைகளை தாங்கள் இப்போதே பெறத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றுள் இரண்டு வாய்ப்புகள் ஐந்து நாட்கள் கொண்ட விடுமுறைக்காலமாகவும் மற்றவை நான்கு நாட்கள் கொண்ட விடுமுறைக் காலமாகவும் வருகின்றன. அக்டோபர்1-5தேதி வரையிலும் அதே மாத இறுதியில்22-26தேதி வரையிலுமான விடுமுறை ஐந்து நாட்கள் கொண்டது. இதுதவிர ஏப்ரல் மாதத்தில் மூன்று முறையும்,மார்ச்,ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதத்தில் இரண்டு முறையும் நான்கு நாட்கள் விடுமுறை வருகின்றது. இந்த ஆண்டிற்கான முதல் நான்கு நாள் விடுமுறை பொங்கல் சமயத்திலும்,கடைசி விடுமுறை டிசம்பர்25-28தேதிகளிலும் வருகின்றது.நீண்ட விடுமுறைகளை முன்னிட்டு மக்கள் உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பயணங்களுக்கான திட்டங்களிலும் இறங்கியுள்ளனர் என்று சுற்றுலா பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். கோவா,மகாபலேஷ்வர்,மாதேரான் ஆகிய சுற்றுலாத்தலங்களுடன் கொங்கன்,சபுதாரா ஆகிய இடங்களும் பயணிகளின் விருப்பத்தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேபோல் துபாய்,சிங்கப்பூர் போன்ற குறுகியகால சர்வதேச சுற்றுலாப் பயணங்களும் எப்போதும் பயணிகளின் தேர்வில் இடம்பெறுவதாக சுற்றுலா முகவர்கள் கூறுகின்றனர்.அரசு அலுவலகங்கள் உட்பட மற்ற பணியிடங்களிலும் இந்த விடுமுறை வாய்ப்புகளை அனுபவிக்க ஊழியர்கள் ஒரு நாள் அதிகப்படியாக விடுமுறை எடுக்கக்கூடும் என்பதை எதிர்பார்க்கின்றனர். இதனால் தங்களது அலுவல்கள் பாதிக்கப்படாதபடி மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று வங்கி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி