காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2014

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு.


காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள்
நிலையில் ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது.

இதனை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும்முதுகலை ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது. அதில், முதுகலை ஆசிரியர்களில் 2014 மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகின்றவர்கள், 2015ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி ஓய்வுபெறுகின்றவர்கள் விபரத்தை சேகரித்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதில் தற்போது முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி முதுகலை பாடங்களில் காலியாக உள்ள பணியிடங்க ளின் விபரங்களையும், மொழிவாரியாக பாடவாரியாக தனித்தனியே சேகரித்து உடனே அனுப்ப வேண்டும் என்றும் புதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளியின் பெயர், ஓய்வுபெறும் ஆசிரியர், பாடம், மொழி, எந்த தேதி முதல் காலியாக உள்ளது, காலியேற்பட காரணம், யாரால், எதனால் பணி ஓய்வு, பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ள அரசாணை எண் மற்றும்நாள், உபரி பணியிடம் நிரப்ப தகுதியில்லை எனில் அது தொடர்பான விபரம் போன்றவற்றையும் முழுமையாக சேகரித்து அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை கல்வி) பாலமுருகன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

5 comments:

  1. 'nadaka mattathavan chithappan veetla ponnu eduthanam'
    'irukaratha vittu paraka aasai patanam'
    aruka theriyathavanuku 1008 arivalam'
    katta kovanam illathavanuku rendu pondatiyam'

    adhu pola trb ku vacha exam ku innum posting vazhiya kanam adutha list edukarangalam mudhala question olunga eduka therinjukanga illa trb office oothi mooditu ponga nalla hospital aga mathunga ithu or polapu

    ReplyDelete
    Replies
    1. well said friend

      Delete
    2. ithukku mela kevalama thitinalum thagum friend

      Delete
  2. so posting increase aaga vaaippirukku

    ReplyDelete
  3. post increase agathu adutha application and challan I mean adutha tet and trb june la vara pogutham adhuku aal theduranga namma pola ilicha vai candidates pakaranga meendum 7lakhs*550 govt ku income exam mudinjutham key answer and question thapa potu lawyers ku collection ivunga sambathika than exam nama select agi sambathika illai aaniye pudunga venam trb

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி