காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு ஜன., 21 ல் மருத்துவ பரிசோதனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2014

காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு ஜன., 21 ல் மருத்துவ பரிசோதனை.


இளைஞர் காவல்படைக்குதேர்வு பெற்றவர்களுக்கு ஜன., 21ல் அந்தந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடத்த, சீருடை பணியாளர் வாரியம்,
கடிதம் அனுப்பி உள்ளது.போலீஸ் துறையில், இளைஞர் காவல் படைக்கு, கம்யூட்டர் ஆப்பரேட்டர், டிரைவர், தபால் பணிக்காக புதிதாக 10,500 பேரை தேர்வு செய்ய, தமிழக சீருடை பணியாளர் வாரியம் அறிவித்தது. தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் 7,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அந்தந்த மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.இவர்களுக்கு, கடந்த ஆண்டு நவ., 10ல் எழுத்து தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, டிச., 30, 31., ஜன., 2ல் உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது.

இதுகுறித்த விபரங்களை, அந்தந்த மாவட்ட எஸ்.பி., க்கள், சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில்தேர்வானவர்களுக்கு ஜன., 21 ல் அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்ய சீருடை பணியாளர் வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது.போலீசார் கூறுகையில், "இளைஞர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜன.,21ல் மருத்துவ பரிசோதனை நடத்த உள்ளனர். ஒரே நாளில் அனைவருக்கும் சோதனை நடத்தமுடியாது என்பதால் வரிசை எண் அடிப்படையில், அடுத்தடுத்த நாட்களில், சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி