பிப். 2ல் இடைநிலை ஆசிரியர்கள் பேரணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2014

பிப். 2ல் இடைநிலை ஆசிரியர்கள் பேரணி.


இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெறுகிறது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) நிர்வாகிகள் பாலசந்தர், தாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று 1988ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது.அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்று வந்தோம். ஆனால் 6வது ஊதியக் குழுவின் படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் ரூ.5,500 குறைத்தனர். இதை எதிர்த்து கடந்த 3 ஆண்டு காலமாக பல்வேறு கட்டபோராட்டங்களை நடத்தி வருகிறோம். அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியின் போது, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்று தருவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் அதையும் நிறைவேற்றவில்லை. அதோடு ஊதியக் குழுவில் ஆசிரியர்களின் கல்வி தகுதியை ஏளனம் செய்து தமிழக அரசு அறிக்கை தந்தது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கவில்லை. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்குவது, தொடக்க கல்வித்துறையில் தமிழ் கல்வி முறை தொடர்ந்திட செய்வதுஉட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 comments:

  1. All Sec.gr.trs. & all teachers must attend the rally. Union is strength.

    ReplyDelete
  2. yellorum....vankappa......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி