மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற6-ம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. அன்றைய நாளிலேயே
மதிப்பெண்சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் முதல்,இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும்,தனித்தேர்வர்களுக்கும் தொடக்க கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜீன்-2013ல் நடைபெற்றது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் வருகிற வருகிற6-ம் தேதி விநியோகப்பட இருக்கிறது.அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு அந்தந்த நிலையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். அந்தந்த பயிற்சி நிலையங்களிலேயே கணினி பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில்,மதிப்பெண் சான்றிதழ் பெற்றவுடன் தனியாகவோ,இணைய தளமையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி