வரும் ஜனவரி 12ம் தேதி, Special Class Railway Apprentices(SCRA) தேர்வை யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ளது. இந்தியாவெங்குமுள்ள பல்வேறான மையங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.இத்தேர்வுக்கான E-Admit Card -ஐ,
அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in-ல் பெறலாம்.
எனவே, தேர்வெழுதுவோர், தங்களின் E-Admit Card -ஐ பதிவிறக்கம் செய்து, அதை கவனமுடன் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை உடனடியாக UPSC -க்கு தெரியப்படுத்த வேண்டும்.மேலும், E-Admit Card -ஐ பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், கீழ்கண்ட தொலைபேசி எண்களில் UPSC உதவி மையத்தை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நாடலாம். அவை,011 - 23385271 / 23381125 / 23098543.E-Admit Card எக்காரணம் கொண்டும் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படமாட்டாது.
E-Admit Card -ல், புகைப்படம் தெளிவாக இல்லையெனில், தேர்வெழுத செல்கையில், ஒரு அடையாள அட்டையுடன், 3 புகைப்படங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி