மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2014

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்.


திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் (துணை இயக்குநர், எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை இயக்குநர் ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் பதவிக்கு நிகரானவை):
அருண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர்.

பொன்னையா, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

புகழேந்தி, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்.

நூர்ஜஹான், கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர்.

சரோஜா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், தூத்துக்குடி - கோவை எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

லத்திகா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், கோவை - தூத்துக்குடி எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

சுப்ரமணியம், செயலாளர், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - துணை இயக்குநர், மின் ஆளுமை, பள்ளிக் கல்வி இயக்ககம்.

பதவி உயர்வு:

சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.மனோகரனுக்கு, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அந்தஸ்து) பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி