டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு, 8 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்: யாருமேவராததால் ஏமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2014

டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு, 8 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்: யாருமேவராததால் ஏமாற்றம்


ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மையத்தில் யாருமே வருகை தரவில்லை,

அலுவலர்கள் மட்டும் 8 மணி நேரம் காத்திருந்துவிட்டு திரும்பினர். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 20ம் தேதிமுதல் 27ம் தேதி வரை 32 மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் பங்கேற்காதவர்களுக்கும், கடந்த 2012ல் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.சான்றிதழ் சரி பார்க்க அழைக்கப்பட்டு அப்போது வராதவர்களும் தேர்வு எழுதிய மாவட்டங்களில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் சென்று கலந்து கொள்ளலாம் என்றும், இதுவே கடைசி வாய்ப¢பாகும். இனிஎந்த வாய்ப்பும் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.குமரி மாவட்டத்தில் முதல்தாள் தேர்வில் அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டனர்.

2ம் தாளில் 347 பேருக்கு 341 பேர் மட்டும் கலந்துகொண்டனர். 6 பேர் கலந்துகொள்ளவில்லை.இதனை போன்று 2012 தேர்வில் வெற்றிபெற்ற சிலரும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாமல் விடுபட்டிருந்தனர். நேற்று சான்றிதழ் சரிபார்ப்புக்காக நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள மையத்தில் காலை 9 மணி முதல் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் தேர்வர்கள் யாரும் வருகை தராததால் மாலை5 மணி வரை காத்திருந்துவிட்டு அலுவலர்கள் திரும்பி சென்றனர்.

6 comments:

  1. cv over next counsiling eppo sir

    ReplyDelete
  2. Feb 13th ymca vula function unmaiyaa frns

    ReplyDelete
  3. நேற்று மு.ப. ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் திருத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் புதிதாக இடம் பெற்றவர்கள். இவர்களுக்கு த பட்டியல் வெளியிடப்பட்ட தகவல் தெரியாது. இவர்கள் ஜனவரி 17 ல் சா.சரிபார்ப்பில் வரவில்லை. அதனால தேர்வு வாரியம் அஞ்சல் வழியாக தகவல் தெரிவித்தது.
    நேற்று 25 பேர் கலந்துகொண்டுள்ளனர்

    ReplyDelete
    Replies
    1. Is this absentist list or tamil medium candidate list.

      Delete
  4. one sitting case verdict varuma?

    ReplyDelete
  5. tet2013 maru result il gularupati. its 100% sure. if any doubt receive information from trb by RTI act. subject maths,history

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி