அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை குறைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், அனைவருக்கும் (எஸ்.எஸ்.ஏ.,) கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றிய, வட்டார மேற்பார்வையாளர்கள்,
அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, முதுநிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் 115 பேரும், அரசுப் பள்ளி ஆசிரியராக மாறுதல் செய்யப்பட்டனர். இதில், எஞ்சிய ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை விரைவில், அரசு பள்ளி ஆசிரியராக மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களை கொண்டே, இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: 10 ஆண்டுகளை கடந்த, இத்திட்டம், இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது; இதற்கான, நிதி ஒதுக்கீடும் குறைந்துவிட்டது. மேற்பார்வையாளர், ஆசிரியர்பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்காயிரம் பயிற்றுனர்களை, 10 பள்ளிகளுக்கு ஒரு பயிற்றுனர், மேற்பார்வையாளர் என, நியமித்து, திட்டம் நிறைவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.
When will be deployment for bt asst? Sir
ReplyDeletewhen will be unit transfer for TRB B.T.'s in DEE.
ReplyDeleteWhen s tet verification sir?
ReplyDelete