எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2014

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.


எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக

வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:
நான் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன். அதற்கு 2வது ஊக்க தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன். இதற்கு 3வது ஊக்கதொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி மீண்டும் மனு கொடுத்தேன்.இந்த மனுவை பரிசீலனை செய்து, எனக்கு 3வது ஊக்க தொகை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசாணையின்படி எனக்கு 3வது ஊக்க தொகை தர வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து மனுதாரரின் மனுவை தமிழக அரசின் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் மனுதாரருக்கு 3வது ஊக்க தொகை தருவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

3 comments:

  1. our aasiriyarukku ethanai ookka thohai arasu kodukirathu enru solla iyaluma?

    ReplyDelete
  2. Sir m.phil incentiveku b.ed thevaiya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி