மாநில பாடத்திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: அரசின் மேல்முறையீடு தள்ளுபடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2014

மாநில பாடத்திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: அரசின் மேல்முறையீடு தள்ளுபடி.


பத்தாம் வகுப்பு வரை மத்திய பாடத்திட்டத்தின் கீழ் கற்பிக்கும் சிவகாசி தனியார் பள்ளிக்கு, மேல்நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அனுமதி வழங்க வேண்டும்" என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச்,
அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததது.

சிவகாசி ஸ்ருதி வித்யோதயா பள்ளியை, விஜய மனோகர பிரபு அறக்கட்டளை நிர்வகிக்கிறது. பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு வரை மத்திய பாடத் திட்டத்தின் (சி.ஐ.எஸ்.சி.இ.,) கீழ் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. மேல்நிலை (பிளஸ் 1, பிளஸ் 2) பள்ளியில் மாநில பாடத் திட்டத்தின் கீழ், வகுப்புகள் துவங்க அனுமதி கோரி பள்ளிக் கல்வி இயக்குனரிடம் 2012 டிச.,28 ல் விஜய மனோகர பிரபு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் துர்கா விண்ணப்பித்தார்.அரசுத் தரப்பில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படாததால், ஐகோர்ட் கிளையில் துர்கா மனு செய்தார். தனி நீதிபதி, "மேல்நிலைக் கல்வியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் துவக்க, மனுதாரருக்கு அனுமதி வழங்க வேண்டும்"என்றார்.இதை எதிர்த்து பள்ளிக் கல்வி இயக்குனர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: மேல்நிலைக் கல்வியை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்றி, பிரித்து கற்பிக்கக்கூடாது. முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை, மாநில பாடத்திட்டத்தின் கீழ் கற்பித்தால் மட்டும் மேல்நிலையில் மாநில பாடத்திட்டம் அடிப்படையில் கற்பிக்க, அனுமதி வழங்கப்படும் என அரசு 2001ம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளது.ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் பாடத்திட்டங்கள், மாநிலபாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளன. முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ.,- சி.ஐ.எஸ்.சி.இ., பாடங்கள், மாநில பாடத் திட்டத்திலிருந்து மாறுபட்டுள்ளது. அனுமதியின்றி, இப்பள்ளியில் மேல்நிலைக்கு 2013--14 க்கு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது.பள்ளி சார்பில் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜரானார். நீதிபதிகள், "தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அரசின் உத்தரவு சட்ட விரோதமானது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி