ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது "களங்கம்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2014

ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது "களங்கம்"


ஆசிரியர் பணியிட மாறுதலில் பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது" என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணமாலை கூறினார்.அவர் கூறியதாவது:
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப்.,2 ல், ஊர்வலம் நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் நடக்கும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தவிர ஆண்டு முழுவதும் பணியிட மாறுதல் பணத்தை பெற்றுக் கொண்டு நடக்கிறது. இந்த மாறுதல் நடவடிக்கையை முதல்வர் ஜெ., தடுக்க வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வில் மற்ற மாநிலங்களை போல இன வாரியான இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து அதற்கான பணத்தை செலுத்தி பணியின்போது இறந்த 120 பேருக்கும், ஓய்வு பெற்ற 60 பேருக்கும் உடனடியாக பணப் பலன்களை வழங்க வேண்டும்.

தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 1800 காலி பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர் 12 ஆயிரத்து 596 பேரும்; 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 17 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களை விட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு பணி வழங்கும் வரை அடுத்த தகுதித்தேர்வை நடத்தக் கூடாது. இவ்வாறு கூறினார்.

7 comments:

  1. Sir Secondary grade teacher vacancy 2000 or 3000 ..
    pls anybody clarify this doubt..
    It will use ful for all paper1 teachers

    ReplyDelete
    Replies
    1. Now around 2000 vacant only. But around 1000 elementary teachers passed paper2 in this tet. So vacancy may be arise by this fact. Okay.

      Delete
  2. When final resulting

    ReplyDelete
  3. How much vacant in SG teacher plz

    ReplyDelete
  4. transfer counsellings are conducted only for name sake in southern districts not only for secondary grade teachers but also for UG and PG teachers. Transfer orders are given in the name of administrative welfare before counselling to other teachers after receiving required amount. Can anyone take any action to stop this scam and conduct counselling in the proper and genuine way so as to give opportunity to deserving teachers who are awaiting for their chance to come in a honest way

    ReplyDelete
  5. tet cancel seiyanum and tet exam thalli vaikkanum secondary grade teacher post fulfill aagum varaikkum-nu solrathu marubatta peccha irukku.

    ReplyDelete
  6. total vacant 13000 nu solrangale.mathsku evlo varumpa plzzzzzzz tel

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி