செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி., முடிவால்நிம்மதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2014

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி., முடிவால்நிம்மதி


"ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகளுக்கு, ஜன.,23 மதியம் முதல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு டி.ஆர்.பி., யால் அனுப்பப்பட்ட உத்தரவில், "சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பட்டப் படிப்பின் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது.

வழக்கமாக, அரசு பணி நியமனங்களுக்கு, "டிகிரி' சான்று மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்களே கேட்கப்படும். "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்று, இதுவரை கேட்டதில்லை. டி.இ.டி.,யில் இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களிடமும், இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது டி.ஆர்.பி.யால் பிறப்பிக்கப்பட்ட, புதிய உத்தரவால் டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றோர், பல்கலைகளில், "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ் கேட்டு குவிந்தனர். "காணவில்லை' என, போலீசில் புகார் செய்து, நாளிதழ்களில் விளம்பரம் செய்து, பின், பல்கலைகளில் 3,000 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே, "டூப்ளிகேட்' செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும் நிலை இருந்தது.

இதுகுறித்து டி.ஆர்.பி.,க்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கேட்பதை கட்டாயப்படுத்த வேண்டாம்' என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து மதுரையில் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களின், "10+2+3' என்ற ஆர்டரில், ஆண்டுகள் மாறியிருக்கும் பட்சத்தில்தான் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுகள்தேவைப்படும். முறையான ஆர்டரில் படித்து, சான்றிதழ் பெற்றவர்களுக்கு"டிகிரி' மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்கள் போதுமானது' என்றார்.டி.ஆர்.பி.,யின் இந்த உத்தரவால், ஜன.,23 ல், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கும் பட்டதாரிகள், நிம்மதி தெரிவித்துள்ளனர்.

22 comments:

  1. Coummunity certificate online appli pannadu sellupadi aguma

    ReplyDelete
  2. Hai brothers second paper cv finish pannavanga plz tel consalidate mark list kandipa venuma .nan b.lit annamalai university dde enkita year wise mark list mattum than iruku.ithu podhuma please tell

    ReplyDelete
  3. Consolidated or semester wise enough.

    ReplyDelete
  4. hai friends, consolidated mark sheet is must? bcz i have semester wise mark sheet (madras university) any one tell me those who finished paper 2 cv on the morrow cv 2 me

    ReplyDelete
  5. yesterday i attended cv...either consolidated r semester mark sheets enough....don't waste ur money....

    ReplyDelete
    Replies
    1. 69.58% ithuku 15 or12 marks ?itha 70 aaga convert pannangala? Yesterday CV mudicha yarathu sollunga plz.

      Delete
    2. NO , you get only 12 mark friend , my CV yesterday my mark 69.66% i got only 12 mark.

      Delete
    3. boss avanga kodthu irukira slap la 60 to 69 ku mark 12 mark 70 and above ku 15 appa 69.58 ku 69 to 70 ie 69.56,69.78 onnumay puriyavillai

      Delete
  6. boss avanga kodthu irukira slap la 60 to 69 ku mark 12 mark 70 and above ku 15 appa 69.58 ku 69 to 70 ie 69.56,69.78 onnumay puriyavillai

    ReplyDelete
  7. Please Any one clarify my doubt Attested by B.T assistant is accepted or not ?

    ReplyDelete
  8. தாள் 2 ஐப் பொறுத்தவரை 12th Std, UG, B.Ed என்று வெயிட்டேஜ் கணக்கிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே 12ஆம் வகுப்பில் அதிக படியான மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால் சராசரியான மாணவர்கள் கூட 1000 மதிப்பெண்களுக்கு மேல் எளிதாக பெற முடிகிறது. ஆனால் பத்து வருடங்களுக்கு முந்தைய நிலை வேறு. 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவது அவ்வளவு எளிது அல்ல.

    மேலும் 12 ஆம் வகுப்பில் கணக்கு, அறிவியல் என முதல் குரூப் எடுத்தவர்களின் மதிப்பெண்ணை காட்டிலும் வரலாறு, வொக்கேஷனல் போன்ற குரூப் எடுத்தவர்கள், மற்றும் செய்முறைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் குரூப்பில் படித்தவர்கள் வெயிட்டேஜ் அதிகம் பெறுவார்கள் என்பது யதார்த்தம்.

    இளங்கலை கல்வியை பொறுத்தவரை நேரடியாக பயின்றவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் அதிகம். அதே சமயம் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிறுவனத்தில் பணி செய்து கொண்டே அஞ்சல் வழி கல்வி மூலம் கற்பவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. இதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

    குறிப்பாக டெட் தேர்வில் 104 மதிப்பெண் எடுப்பவருக்கும் ஒரே வெயிட்டேஜ் 90 மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் ஒரே வெயிட்டேஜ் என்று இருப்பதை மாற்றி டிஇடி தேர்வில் பெற்ற ஒவ்வொரு மதிபெண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்க பட வேண்டும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒவ்வொரு மதிபெண்ணுக்கும் 0.5 MARK என்ற வீதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி தற்போதைய நிலையில் கடின முயற்சி எடுத்தவருக்கு வாய்ப்பு வழங்கலாமே!. (ஏனெனில் இந்த 90 முதல் 104 க்குள் தான் பெரும்பாலானோர் மதிப்பெண் பெறுகின்றனர்).

    இயன்றால் முதுகலை ஆசிரியத் தேர்விற்கு வழங்கப்படுவது போன்று வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள வருடங்களுக்கு ஏற்ப தனியே வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு தனியே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாம்.

    இவ்வாறு பல்வேறு முரண்பாடுகள் உள்ள நிலையில் தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த டெட் தேர்விலாவது யாருக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த முரண்களை களைந்து அரசாணை வெளியிட வேண்டும் என்பதே தேர்வர் பலரின் விருப்பமாகும்.

    ReplyDelete
    Replies
    1. good thought.90 eduthavargal 104 eduthavargalai vida adhiga weitage vangiyirukiraragal. tet mark ovvoru markukum improtance koduthal nanraga irukum.correspondence la mudichavanga nilaimai parithabam than. kavanikkuma arasangam?

      Delete
    2. definitely endha muranpadu kalaiyapeda vendum

      Delete
  9. U R ABSOLUTELY CORRECT. WHO HANG THE BELL TO THE CAT??????????
    Yesterday in cv Maths one girl passed TET by re-result (90 marks). But her weightage is 82. Computer science group. 1080 marks in +2. she got full weightage. 40.
    But I passed with 104 in TET having weightage 68. My age 45yrs.
    Last reresult I didn't got any one grace mark. If it comes my weightage may change.
    So, definitely, I expect one mark from chennai high court which will be on 28/1/2014.
    All will get one mark since one question deleted which was informed by one case filed candidates.

    ReplyDelete
    Replies
    1. all the best sir.dont worry u will get.

      Delete
    2. The Government has decided to rank the eligible teachers based on their marks scored in the career i.e +2, degree and B.Ed. (it is not ONLY TET marks). This is based on the panel recommendation and already cleared by the Hon. High Court.

      Any rule will have its own merits and de-merits.Purely It is not the case of 90-104.Just think who have got 839,959 or1079 in +2 .They also blabber like this.In degree and B.Ed, you know how many people have got 69.99 and lost 3 marks.

      So keep quiet and pray.Already CM has given proper reply those who have raised concern about this system. Please check the weightage GO.






      Delete
  10. how oc candidates will be selected?community basis? or open quata? paper 2

    ReplyDelete
    Replies
    1. Open competition based on the weightage marks.

      Delete
  11. Ramesh sir.... neenga b.ed mudichathu yantha year?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி