ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு உயர் அதிகாரி கூறினார். இந்தியா முழுவதும் 2010ம் ஆண்டு
ஜூன் முதல் ஜூலை மாதம் வரை வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் ஆதார் அட்டை வழங்குவதற்காக கைரேகை, விழித்திரை, புகைப்படம் பதிவு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 2011ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய பணி தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் 5 வயது முடிந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 84.62 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 82.87 சதவீதம், ராமநாதபுரத்தில் 79.51 சதவீதம் பேருக்கும் புகைப்படம் மற்றும் கைரேகை, விழித்திரை பதிவு செய்யும் பணி முடிந்துள்ளது. சென்னையில் உள்ள 41 லட்சத்து 53 பேரில் 22 லட்சத்து 9 ஆயிரத்து 50 பேருக்கு அதாவது 55.13 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்துள்ளது.தற்போது சென்னை முழுவதும் புகைப்படம் எடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.சென்னையை பொறுத்தவரை இந்த பணிகளை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் (ஏ.ஆர்.ஓ.) தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது. எந்தெந்த பகுதியில் புகைப்படம் எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படுகிறது. பத்திரிகை மூலமாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இணை ஆணையாளர் எம்.ஆர்.வி. கிருஷ்ணா ராவ் கூறியதாவது:சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் பகுதி அருகே ஆதார் அட்டை எடுக்கும் பணிக்கான மையம் கடந்த டிசம்பர் மாதம் வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் பேர்இன்னும் புகைப்படம் எடுக்க வேண்டியதிருப்பதால், ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகம், கலெக்டர், தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் மட்டுமே செயல்படும். விடுபட்டவர்கள் குடும்பத்துடன் அங்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.இதுவரை ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துக் கொண்ட 4,78,38,885 பேரில் சுமார் 3 கோடியே 86 லட்சம் பேருக்கு ஒன்றரை மாதத்திற்குள் தபால் மூலம் அல்லது எஸ்எம்எஸ் மூலம் என்பிஆர் நம்பர் மற்றும் ஆதார் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி