மார்ச் இறுதிக்குள் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2014

மார்ச் இறுதிக்குள் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை உத்தரவு.


மார்ச் இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல்,
நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா; பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்டஇயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 347 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 27 பள்ளிகளில் முழுமையான கழிப்பறை வசதி, திருப்பூர் மாவட்டத்தில் 235 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 113 பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி வரும் மார்ச்மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையே இதன் முழு பொறுப்பும் சேரும்.வரும் கல்வியாண்டில், கரூர், கோவை, திண்டுக்கல், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் 70 நர்சரி பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்க, முன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

நடக்கவுள்ள பொதுத் தேர்வுகளில் 95 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு, சபிதா பேசினார்.இக்கூட்டத்தில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கேடயங்களும், பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி