தமிழக மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு : ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரையும் இலவசம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2014

தமிழக மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு : ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரையும் இலவசம்.


தமிழக ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும், பொங்கல் பை மற்றும், 100 ரூபாய் ரொக்கப்பணம் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழர்களின் கலாசார விழாவான,
பொங்கல் திருநாளை, பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக, கடந்த, தி.மு.க., ஆட்சியில், 2009ம் ஆண்டு, ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், 100 கிராம் பாசிப்பருப்பு, 20 கிராம் எடையுள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அடங்கிய, பொங்கல் பை வழங்கப்பட்டது.இது ஏழை மக்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., 2013ம் ஆண்டு, ஒரு கிலோபச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 100 ரூபாய் ரொக்கம் வழங்கியது.லோக்சபா தேர்தல், 2014ல் வர உள்ளதால், இம்முறை பொங்கல் பரிசாக, கூடுதல் தொகை வழங்கப்படும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்க, முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக, முதல்வர் விடுத்துள்ள அறிக்கை:நடப்பு, 2014ம் ஆண்டு, பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில், ரேஷன் கடைகளில்,அரிசிபெறும், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 100 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி