தேசிய புத்தக நிறுவனம், தமிழகத்தில், முதன் முறையாக, சென்னையில் உள்ள கல்வித் துறை வளாகத்தில், புத்தக நிலையத்தை, நேற்று துவக்கியது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கீழ்,
தேசிய புத்தக நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தமிழகத்தில், முதன் முறையாக, தன் கிளையை திறந்துள்ளது. இதில், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களும் கிடைக்கும். இந்த விழாவில், நிறுவனத்தின் தலைவர், சேது மாதவன் பேசுகையில், ""ஐதராபாத், கவுகாத்தி, பாட்னா, அகர்தலா நகரங்களிலும், விரைவில், தேசிய புத்தக நிலையம் திறக்கப்படும். உலக புத்தக கண்காட்சி, வரும், 15 முதல், 23ம் தேதி வரை, டில்லியில் நடக்கிறது. இதில், 30 நாடுகள் பங்கேற்கின்றன. 1,700 அரங்குகள் அமைக்கப்படுகின்றன,'' என, தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி