அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2014

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை.


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்,டியூஷன் எடுக்கக் கூடாது;மீறினால்,சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளி கல்வி இயக்குனர்
ராமேஸ்வர முருகன்எச்சரித்துள்ளார்.அவரது அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவ,மாணவியரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து,தனி வகுப்பு (டியூஷன்) எடுப்பதாகவும், "டியூஷனுக்கு" வராத மாணவ,மாணவியரிடம்,வகுப்புகளில்,ஆசிரியர்,கடுமையாக நடந்து கொள்வதாகவும்,அரசின் கவனத்திற்கு,புகார் வந்துள்ளது.ஆசிரியர்களின்,இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தில்,மாணவர்களை கட்டாயப்படுத்தி,சில ஆசிரியர்கள் டியூஷன் எடுத்துள்ளனர். இதனால்,மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கல்வித்துறைக்கு புகார் வந்ததை அடுத்து,அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.எனவே,முறைகேடான செயல்களில் ஈடுபடுவதை,ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும்;மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களிடம் வழங்கி அதில்,அவர்களின் கையெழுத்தை பெற்று கோப்பில் பராமரிக்க,தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு,இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

1 comment:

  1. Govt pg teachers running coaching center for various competition exam in Dharmapuri.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி