சி.பி.எஸ்.இ., வாரியத்தோடு போட்டியிட முயலும் மாநில வாரியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2014

சி.பி.எஸ்.இ., வாரியத்தோடு போட்டியிட முயலும் மாநில வாரியம்.


CBSE மாணவர்களுக்கு சமமாக, ராஜஸ்தான் கல்வி வாரிய மாணவர்களையும் மதிப்பெண் பெற வைக்க, உயர்நிலைக் கல்விக்கான ராஜஸ்தான் வாரியம்(RBSE) முயற்சியில் இறங்கியுள்ளது.ஏனெனில், CBSE மாணவர்களின் மதிப்பெண்களோடு ஒப்பிடுகையில்,
RBSE வழியில் பயிலும் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாக உள்ளன. இதனால், அவர்கள் மாநிலத்தில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதில் தடங்கல்கள் ஏற்படுகின்றன.இந்த இடங்களை CBSE மாணவர்களே, அதிகளவில் ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். எனவே, இப்பிரச்சினையை ஒரு முக்கியமான அம்சமாக எடுத்துக் கொண்டுள்ள RBSE, தனது மாணவர்களையும், அதிகளவிலான மதிப்பெண்கள் பெற வைக்கும் முயற்சிகளை எடுத்துள்ளது.கடந்த 2012 - 13ம் கல்வியாண்டின் படி, ஆஜ்மீர் பிராந்தியத்தில், 10ம் வகுப்பில், CBSE மாணவர்களின் தேர்ச்சி 99.22%. ஆனால், RBSE மாணவர்களின் தேர்ச்சி 64%. எனவே, CBSE -ஐ போன்று, Comprehensive and Continues Evaluation(CCE) முறையை அமல்படுத்தவும் RBSE திட்டமிட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி