தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ‘வெற்றி உங்கள் கையில்‘ என்ற புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ‘வெற்றி உங்கள் கையில்‘ என்ற புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. இந்த திட்டம் முதன் முதலாக சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் எளிதாக தேர்வை எதிர்கொள்ளவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் வெவ்வேறு பள்ளிகளில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியும், வழிகாட்டுதலும் அளிக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்வு வினாத்தாள்களைக் கொண்டு தேர்வுகள் வைத்து தயார்படுத்த வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள மாதிரி வினா வங்கி கொண்டு பயிற்சி அளித்தல், மாலைநேர வகுப்புகள் நடத்துதல், அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து ஆலோசனை வழங்குதல். ஆகிய வழிமுறைகளை பின்பற¢றி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் பொதுத்தேர்வை அவர்கள் பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும்.‘வெற்றி உங்கள் கையில்‘ புதிய திட்டத்தை திறம்பட செயல்படுத்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு அலுவலர்கள் பார்வையிட்டு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் இந்த திட்டம் நாளைதொடங்கி வைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி