பணியில் இல்லாத மாற்றுத்திறனாளி பி.எட்., பட்டதாரிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பயிற்சியளிக்க, அனைத்து மாவட்டங்களிலும் மையம் அமைக்கும் படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவு:
பி.எட்., முடித்து பணியில் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு, எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,), ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் வாயிலாக, சிறப்பு பயிற்சி வழங்க, பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஜெ., தலைமை யில் நடந்த, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், நகரின் மையப்பகுதியில் எளிதில் அணுகும் வண்ணம் மையத்தை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்கள், தேர்ந்தெடுக்க வேண்டும். பயிற்சிக்குரிய கருத்தாளர் களை தேர்ந்தெடுப்பது, நிறுவன முதல்வர்களின் பொறுப்பு. பயிற்சி மையங்கள் நடத்துவதற்கான செலவு விவரங்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி