தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.பாலசந்தர் சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
6-வது ஊதியக்குழு பரிந்துரையை அடுத்து மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படைச் சம்பளமும், ரூ.4,200 தர ஊதியமும் வழங்கப் படுகிறது. ஆனால், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியம், ரூ.2,800 தர ஊதியம் என மிகக் குறைவான ஊதியம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் போது, 3 சதவீதத்துக்குப் பதில் 6 சதவீத ஊதிய உயர்வு (2 இன்கிரிமென்ட்) வழங்க வேண்டும்.
same qualification salary different enna kodumai sir
ReplyDeleteporaduvom vertiperuvom
DeleteSg tr ku Eppo theerpu veliakumnu sollunga.....then porattamna ellarum ottrumaya vanga
ReplyDelete