அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் -முதல்வர் ஜெயலலிதா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் -முதல்வர் ஜெயலலிதா


மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுரை,தேனி,ராமநாதபுரம்,சிவகங்கை,புதுக்கோட்டைமாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது:
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு,பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வரும் கல்வியாண்டில்,அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் ஏற்கெனவே,மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விட்டனர். அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதத்தில் குழந்தைகள் சேர்க்கையைநடத்திக் கொள்ளலாம் என்ற நடைமுறையை கைவிட்டு,இப்போதே அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்.எஸ்எஸ்ஏ அலுவலர்களின் முக்கிய பணிகளில் மாணவர் சேர்க்கையும் ஒன்று. அவர்கள் இப் பணியில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்,உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்,பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும்.உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி,தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி மார்ச்2014-க்குள் செய்து தரப்படும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி,மாவட்டம் தோறும் முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் கழிப்பறை,குடிநீர் வசதி தேவைப்படும் பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

பட்டியலில் கொடுக்கப்பட்ட கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிக்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.மேலும்,ஏற்கெனவே உள்ள கழிப்பறை,குடிநீர்த் திட்டங்களில் மராமத்து போன்ற பணிகளுக்கும்,விடுபட்ட பணிகளுக்கும் அந்தந்தப் பகுதி எம்.பி.,எம்.எல்.ஏ.,ஆட்சியர்,திட்ட அலுவலர்,வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்,ஊராட்சித் தலைவர்கள் போன்றோரை அணுகி நிதி ஒதுக்கீடு பெற்று மேற்கண்ட வசதிகளை முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.கல்வித்துறை அதிகாரிகள் அலுவலகத்திலிருந்தே பணியாற்ற வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைகளை அறிந்து மாணவர்களுக்கான வசதிகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஆசிரியர்களை பணியாற்ற வைக்க வேண்டும்,என்றார்.

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Anbu selvi. Comment/?cm pls teachers appointment kuduka parunga

    ReplyDelete
  3. Cv nadakkaramari iruntha msg me art 8695617154(whatsapp number )

    ReplyDelete
  4. cm mam vazhga.kalvi thuraiyil oru puratchi (tet,trb exams) earpaduthi irukiga. qualified trs selection velipadaya nadakthu. hats of u mam.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி