அண்ணாமலை பல்கலையில்உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் 'கட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2014

அண்ணாமலை பல்கலையில்உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'


அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தபடி, முனைவர் பட்டப்படிப்பு படித்து, அதற்கான கட்டண நிலுவையைச் செலுத்தாததால், 286 உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம்
நிறுத்தப்பட்டு உள்ளது.கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 3,020 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.2008 - 09ம் ஆண்டில், பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்கள், முனைவர் (பிஎச்.டி.,) பட்ட ஆய்வை, அதே பல்கலைக் கழகத்தில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு, முனைவர் பட்ட கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள், முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் மட்டும் செலுத்தி விட்டு, அடுத்த ஆண்டுக்கான கட்டணம் செலுத்துவது இல்லை.முனைவர் பட்டத்திற்கான, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போது, முழு கட்டணத்தையும் செலுத்தி, பட்டத்தை பெற்றுக் கொள்வது என, ஏற்கனவே இருந்த நிர்வாகம் கடைபிடித்து வந்தது.இதனால், முனைவர் பட்ட ஆய்வு செய்யும் உதவி பேராசிரியர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையில், 4.5 கோடி ரூபாய், பாக்கி நிலுவையில் உள்ளது. இந்தக் கட்டணபாக்கியை வசூலிக்க, தற்போதைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.2008 - 09 கல்வி ஆண்டில்...: முதல் கட்டமாக, 2008 - 09ல், பேராசிரியராக சேர்ந்து, முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், நீண்ட காலமாக, கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள், 19 ஆயிரம் - 57 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில், இந்த உதவி பேராசிரியர்கள், 286 பேருக்கு, பல்கலைக் கழக நிர்வாகம், எந்த முன்னறிவிப்பும் தெரிவிக்காமல், மாத சம்பளத்தை நிறுத்திஉள்ளது.குறிப்பாக, 2008 - 09ம் ஆண்டில், உதவி பேராசிரியராக சேர்ந்தவர்களுக்கு மட்டும், மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.சம்பளம் நிறுத்தம்குறித்து, உதவி பேராசிரியர்கள், பல்கலைக் கழக நிர்வாகத்திடம் முறையிட்ட போது, முனைவர் பட்ட கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி