பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிற்றுண்டி: கோவை மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2014

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிற்றுண்டி: கோவை மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்.


கோவை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. கோவை மாநகராட்சியிலுள்ள உயர்நிலைப்பள்ளிகளில் 2,507 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் 2,427 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களின் சோர்வு மற்றும் பசியை போக்கும் வகையில், மாலை நேர சிற்றுண்டி வழங்க, மாநகராட்சி பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, கல்வி, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள்குழுவில் மே மாதமும், மாமன்ற கூட்டத்தில் ஜூன் மாதமும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை ராமநாதபுரம் "நளன் உணவகம்' மூலம், மாணவர்களுக்கு மாலைநேர சிற்றுண்டி வழங்க டெண்டர் விடப்பட்டது. டாக்டர் நஞ்சப்பா ரோட்டிலுள்ள, அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளியில், மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. மேயர் வேலுசாமி, மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார். மேயர் பேசுகையில், ""பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக, மாலை நேர வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. காலை நேரத்தில் வீட்டில் இருந்து வரும் மாணவர்கள், மாலையில் தாமதமாக வீடு திரும்புகின்றனர். மாணவர்களின் சோர்வை போக்கிபுத்துணர்வு ஏற்படுத்த சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் முன்மாதிரியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார்.

"மெனு' என்ன
சிற்றுண்டியாக சோயா சுண்டல் 100 கிராம், கருப்பு கொண்டை கடலைசுண்டல் 100 கிராம், பாசிப்பயறு சுண்டல் 85 கிராம்(ஏதாவது ஒன்று); ராகி புட்டு 100 கிராம், மக்காச்சோளப்புட்டு 100 கிராம், அரிசி புட்டு 100 கிராம்(ஏதாவது ஒன்று); சுக்கு டீ 100 மி.லி., வல்லாரை சூப் 150 மி.லி., தூதுவளை சூப் 150 மி.லி.,(ஏதாவது ஒன்று) வழங்கப்படுகிறது.சிற்றுண்டி பொருட்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு பிரித்து, மாலை 4:00 மணிக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு மாணவருக்கு ஒரு நாளுக்கு 25 ரூபாய் செலவிடப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில், மாலை நேர சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு வகைசிற்றுண்டி சுழற்சி முறையில் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி