அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2014

அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.


சி.பி.எஸ்.இ., எடுத்துள்ள முடிவின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதுவோருக்கான அனுமதி அட்டைகள்(admit cards), ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும்.
நேரடியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுமதி அட்டையுடன், பிரின்ட் செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலும் மாணவர்களுக்குநேரடியாக அனுப்பப்பட மாட்டாது. இதன்மூலம், தேர்வின் தரவை(exam data), மாணவர்களுக்கு சரியான காலகட்டத்தில் அனுப்பி வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி நிர்வாகங்கள், அனுமதி அட்டைகளை ஜனவரி 27ம் தேதி முதல் நேரடியாக பதிவிறக்கம் செய்து, அவற்றில் பள்ளி முதல்வரிடம் attestation பெற முடியும். தனது இணையதளத்தில், தேர்வெழுதக்கூடிய 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பட்டியலை ஏற்கனவே CBSE வெளியிட்டுள்ளது என்ற செய்தி நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி