அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2014

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய கோரிக்கை.


அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப்பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றுகோரிக்கை எழுந்துள்ளது.அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள3ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது.

இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில்12,596இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர்.3ஆயிரம் பணியிடங்களுக்கு12ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால்,இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது.ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல,இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது.அதாவது பிளஸ்2-வில் எடுத்த மதிப்பெண்,இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு,ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே15, 25, 60மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.இது தேர்ச்சி சதவீதத்துக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்.சான்றிதழ் சரிபார்க்கும் பணி: இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜனவரி20-ஆம் தேதி தொடங்கியது.காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்களுக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.வியாழக்கிழமை வரை இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிநடைபெற்றது.வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி28-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.

மேல்நிலை பள்ளி பாடப்பிரிவு அடிப்படை: சான்றிதழ் சரிபார்க்க வந்த இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியது:
இடைநிலை ஆசிரியர் நியமனம்,வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.மேலும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் இதுவரை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதாவது மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்களுக்கு50சதவீத இடங்கள்,கலைப் பிரிவு மாணவர்களுக்கும்,தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் தலா25சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் இருந்தது.இப்போது அந்த முறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஆய்வக தேர்வு மூலமே400மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.எனவே இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

27 comments:

  1. TRB conduct other exam instead of weightage mark in our subject for 50 or 100 marks. This method is too comfort for all candidates. This is my suggestion.

    ReplyDelete
  2. vocational group ku practical mark okay...
    science group ku laboratary marks okay...
    history group(3rd)ku fulla external marks than. no internal marks to 3rd group like the above mentioned group. Arts groupna avlo kevalama poiducha apo..

    ReplyDelete
    Replies
    1. Good correct question, why this is not reach our TRB

      Delete
  3. Neenga own aha ezuthalam..neenga 10th la nalla padichurundha biomaths eduthurupeenga...appdi eduthirundha therium kashtam...

    ReplyDelete
    Replies
    1. non 10thla 419 marks.but i select history group.10 mathsla 92 marks.

      Delete
    2. Mam....nirmala!!!! Unga 419ku enga school il. Biomaths kidaikadhu...history,vocational,purescience mattum kidaikkum.NS BOYS HSS.THENI.

      Delete
  4. Neenga own aha ezuthalam..neenga 10th la nalla padichurundha biomaths eduthurupeenga...appdi eduthirundha therium kashtam...

    ReplyDelete
  5. Sir Secondary grade teacher vacancy 2000 or 3000 pls anyone clarify this doubt..

    ReplyDelete
  6. second grade 6000 poduporanka, feb second week appointment order vankalam, feb 24 duty join pannanum .

    ReplyDelete
    Replies
    1. hey how u know plz tell

      Delete
    2. Sir comedy pannama true news mattum therintha sollunga sir plz........

      Delete
    3. trichy co office la sonathu . cm kita date ketu irukalam sir

      Delete
    4. bt evlo podaranganu sonnangala thambi please sollunga pa

      Delete
  7. 11,48 friend UNGA KITA WHO TOLD

    ReplyDelete
  8. NAN CASE PODA POKIREN DON'T WORRY

    ReplyDelete
    Replies
    1. enanga da ithu enamo tea kudika pora mathiri case poda poren nu ethana per kilambiyirukeenga

      Delete
  9. Army quota irukka sir.....anybody clarify pls...

    ReplyDelete
  10. Army quota irukka sir.....anybody clarify pls...

    ReplyDelete
  11. Sir Secondary grade teacher vacancy 2000 or 3000 ..
    pls anybody clarify this doubt..
    It will use ful for all paper1 teachers

    ReplyDelete
  12. just wait two days. all your doubts clear after cv. Until don't confuse yourselves.

    ReplyDelete
  13. Eththanaiyo days wait pannitom. 2 days wait panna mudiyathanu puriyuthu. But manasu kekala. Paithiyam pidichurum pola iruku. Paper 1 la 82 weitageku kidaikuma? Conform ma therinja sollunga pls.

    ReplyDelete
  14. Sir, Engalukkum 10th Mark (413) apa athikam than. 1st Groupm Kuduthanka. Ana 1st Group padicha Doctor, Eng. ipdi poka enkakita vasathi illamathan, Arts group edhuthu meritla D.T.Ed padichutu ippa 7 varusama vela varuma varathanu kathukittu irukkom.

    Arts Group na 1m kevalam illa sir.

    Kadavulluku therium, Nanga D.T.Ed padikka kuda eppdi pana kastam pattomnu, atha eppdi thirupi adachomnu.

    Enkaala padika vacha kadavul, enkaluku oru nalla valiya kattuvar.

    Arts group nu kevalama pesa vendam. Please..

    Yar yarku enna enna nadakumo athu kandippa nadkkum.

    ReplyDelete
  15. we are all teachers.group selection is our own idea.don,t hurt others

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி