தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2014

தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.


திருப்பூர் மாவட்டத்தில், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய நடுநிலைப்பள்ளிகள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வு நேற்று துவங்கியது.நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக
தரம் உயர்த்த, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், கடந்த மாதம் கருத்துரு பெறப்பட்டது. 11 நடுநிலைப்பள்ளிகள், தங்களது பள்ளிகளை தரம் உயர்த்துமாறு கருத்துரு அளித்தன. அப்பள்ளிகள் பற்றிய முழு விவரங்களும், கருத்துருவில் இணைத்து தரப்பட்டது.கடந்தாண்டில், கருத்துரு வைத்து நிராகரிக்கப்பட்ட சில பள்ளிகளும், தற்போது மீண்டும் கருத்துரு வைத்துள்ளன. கடந்தாண்டு கருத்துரு வைத்த மற்ற பள்ளிகளும், ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, மொத்தம் 28 பள்ளிகளில், தற்போது கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர் தலைமையில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அடங்கியகுழு, நேற்று ஆய்வை துவக்கியது.நடுநிலைப்பள்ளிகளுக்கு சென்று, கருத்துருவில் உள்ள விவரம் சரிபார்க்கப்படுகிறது.

தகுதி இருப்பின், அப்பள்ளிகளை தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்படும். தகுதியான பள்ளிகளின் கருத்துரு, பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும். பரிசீலனைக்குபின், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படும்.மாவட்ட தொடக்க கல்விஅலுவலர் யதுநாதனிடம் கேட்ட போது, ""கருத்துரு கொடுத்துள்ள 28 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும். பள்ளிகளை தரம் உயர்த்துவதில், பல நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல பள்ளிகள் கருத்துரு அனுப்புகின்றன. நேரில் ஆய்வு செய்யும்போது மட்டுமே, தகுதியான பள்ளிகள் குறித்து முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், பள்ளிகளை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும்,'' என்றார் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி